நல்லூர் – திருக்கோணேஸ்வரர் ஆலயங்களில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை!

0

திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரர் ஆலய சிலை மற்றும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயங்களின் கலசங்கள் உடைந்து விழுந்ததாக சமூக வலைத்தளங்களின் மூலமாக போலியான செய்திகள் பரப்பட்டுவந்தன.

இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாமெனவும் திருக்கோணேஸ்வரர் ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் தலைவர் க.அருள்சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் திருகோணமலை மாவட்டத்தில் எந்த ஒரு ஆலயத்திலும் இடம்பெறவில்லை என எமது செய்தியாளர்களும் உறுதிப்படுத்தினர்.

இதேவேளை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் கலசம் உடைந்து வீழ்ந்ததாக வெளியான செய்திகள் உண்மையில்லை என்று நல்லூர் நிர்வாகம் அறிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளரும் உறுதிப்படுத்தினார்.