நாட்டில் மேலும் 12 பேருக்கு கொரோனா

0

நாட்டில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 231ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் ஆறு பேர் குவைத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் ஏனைய ஆறு பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, இதற்கு முன்னர் 24 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போதுவரை 36 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து இரண்டாயிரத்து 996 பேர் மீண்டுள்ள நிலையில் இன்னும் 223 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.