மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலா துறையினை மேம்படுத்துவதற்காக பாரிய வேலைத்திட்டம்!

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப்பயணிகளின் சுற்றுலாமையமாக மாற்றியமைப்பதற்கான ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.கெட்டியாராச்சி நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்ததுடன் , மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் கலந்துரையாடலும் நடைபெற்றது.

கலந்துரையாடலில் மட்டக்களப்பில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டை சுற்றுலாமையமாக மாற்றியமைப்பது தொடர்பான ஆராயப்பட்டது அதன்போது சுற்றுலாத்துறையினருக்கு ஏற்றவகையில் எல்லா வசதிகளையும் கொண்டதாக மாற்றிஅமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் தங்களின் கருத்துக்களை வெளியிட்டனர்.

தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமாக  உள்ளதால் இதனை ஒரு வருமானம் ஈட்டக்கூடிய இடமாகவும் இருக்கின்ற பழைமையை மாறாமல் கவர்ச்சிமிக்கதாக்கி கொண்டு முன்னெடுப்பதற்கு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

கோட்டையில் கலாச்சார விழிமியங்களை பிரதிபலிக்கின்ற நிகழ்ச்சிகள் பண்பாட்டு கலாச்சார உடைகள் உணவுகள்  நூதன சாலைகள் மற்றும் நமது மக்களின் வணக்கமுறைகள் என மாவட்டத்திற்கென தனித்துவமான பண்பாட்டு பின்ணனிகளை பிரதிபலிக்கும் விடையங்களையும் கொண்ட ஒரு மத்திய நிலையமாக மாற்றி அமைதற்கான முதற்கட்ட பணியாக தகவல் மையம் ஒன்றை அமைத்து அதனுடாக செயற்படுத்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதன.

மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினரை கவரக்கூடிய இடங்களாக பல இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன அதில் முக்கியமானதாக உன்னிச்சை தொப்பிக்கல் மலை, பொண்டுகள் சேனை பனிச்சங்கேனி மட்டக்களப்பு வாயில் மிதக்கும்படகு வீடுகளை அமைத்து அதில் சிற்றுன்டிச்சாலைகளை அமைப்பது போன்ற முன்மொழிவுகள் செய்யப்பட்டன.

தொப்பிக்கல் மலையில் இயற்கைப் பூங்காக்களை அமைப்பது காட்டுவிலங்குகளை அவதானிக்க கூடியதான சுற்றுலாத்துறையினரை கவரக்கூடிய திட்டங்களை செய்வதற்கும் மேலும் மாவட்டத்தில் சுற்றுலாதலங்களை அடையாலம் கண்டு அபிவிருத்திசெய்வதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.