வங்காள விரிகுடாவின் ஏற்பட்ட தாழமுக்கம், தற்போது வலுவடைந்து, சூறாவளியாக மாற்றமடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
புரவி என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி, திருகோணமலையிலிருந்து கிழக்கு திசையாக சுமார் 300 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த சூறாவளியின் வேகம் மணித்தியாலத்திறகு 75 முதல் 85 வரை அதிகரித்து வீசும் என்பதுடன், இடைக்கிடை மணித்தியாலத்திற்கு 95 கிலோமீற்றர் வரையும் வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது,
நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மீல்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.