மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 63 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நா.மயூரன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 14 நாட்களில் ஆரையம்பதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் 42 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை மற்றும் வவுணதீவு, நாவற்காடு வைத்தியசாலைகள் கொரோனா சிகிச்சை பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.