முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஷ்னபிள்ளை கிழக்கு தமிழர் கூட்டமைப்பில்  இணைவு.

0

கடந்த மாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து தெரிவான வெள்ளிமலை என அழைக்கப்படும் ஞா.கிருஷ்னபிள்ளை தற்போது கிழக்கு தமிழர் கூட்டமைப்பில்  இணைந்து கொண்டார் .

கிழக்கு தமிழர்  கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்திற்கான கூட்டுச் சனநாயகப் பணிக்குழு உறுப்பனர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் அண்மையில்ம காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் கிழக்குத் தமிழர் கூட்மைப்பின் தலைவர் த.கோபாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கூட்டுச் சனநாயகப் பணிக்குழுவின் இணைப்பாளர் கலாநிதி சு.சிவரெத்தினம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை, ஆலையடிசேவம்பு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் இரா.நடராசா, இலங்கைத் தேசிய ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செ.இராசையா, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சோ.புஸ்பராஜா, தேசிய மக்கள் முன்னிலைக் கட்சியின தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் விசவசாய அமைச்சருமான து.நவரெட்ணராஜா, அகில இலங்கைத் தமிழர் மகாசபைத் தலைவரும், முன்னாள் பாராளுமனற உறுப்பினருமான கலாநிதி கா.விக்னேஸ்வரன், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும், கிழக்கு மீளெழுச்சிக் கழகத் தலைவருமான ந.திலிப்குமார், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதியுமான த.சிவானந்தராஜா, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சீ.செல்வராசா, கிழக்கு தேச விடுதலை முன்னணி தலைவர் ம.புவிதரன், மக்கள் செயற்கழகத் தலைவர் நி.பிரசாந், தமிழர் மகா சங்கச் செயலாளர் து.இராமகிருஸ்ணன் உட்பட அம்பாறை மாவட்ட பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் தலைவர் கோபாலகிருஸ்ணன் அவர்களால் தெளிவு படுத்தப்பட்டதுடன், கூட்டுச் சனநாயகப் பணிக்குழுவின் விடயங்கள் பற்றி அதன் இணைப்பாளர் சிவரெத்தினம் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.