முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளது- நினைவுக்கல் மாயம்

0

போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து முல்லைத்தீவு-  முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நேற்று (புதன்கிழமை), குறித்த பகுதிக்கு புதிதாக கொண்டுவரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல் ஒன்றும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடுகை செய்வதற்காக நேற்று (புதன்கிழமை) பொது நினைவுக்கல் ஒன்று கொண்டுசெல்லப்பட்ட நிலையில், சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே தற்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.