மட்டக்களப்பில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை!

0

மட்டக்களப்பு- சந்திவெளி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) மாலை, சந்திவெளி- பாலையடித்தோனா பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில்  21 வயது மற்றும் 22 வயதுடைய இளைஞர்களே படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நிகழ்ந்தமைக்கு தனிப்பட்ட பிரச்சினை மற்றும் கருத்து மோதல் ஆகியவையே காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.