மேலும் 197 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

0

கொரோனா பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாது வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 197 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த அனைவரும், இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துபாயிலிருந்து 107 பேரும், அவுஸ்திரேலியாவின் மெல்போர்னிலிருந்து 78 பேரும், ஜப்பானின் நரிட்டோவிலிருந்து 12 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் தனியார் வைத்தியசாலையின் ஊழியர்களினால் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காவும் அழைத்துச் செல்லப்பட்டனர்.