மே 14 க்குப் பின்னர் பொதுத் தேர்தல் – வர்த்தமானி

0

2020 ஆம் ஆண்டு தேத்தல் நடைபெறும் திகதி தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸின் ஆபத்தான நிலை காரணமாக முன்னர் அறிவிக்கப்பட்டவாறு பொதுத் தேர்தலை 2020 ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாது என்று ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்தெடுக்கும் வாக்கெடுப்புத் தினம் ஏப்ரல் 30ஆம் திகதியிலிருந்து 14 நாள்கள் பின்னர் ஒரு தினம் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.