யாழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை!

0

யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

‘கடந்த மூன்று நாட்களாக வெளிவந்த பரிசோதனைகள் முடிவுகளின்படி பரிசோதனைக்கு உள்ளானவர்கள் ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது“ என அவர் கூறியுள்ளார்.