வளி மாசு மட்டத்தின் அளவு அசாதாரணமான முறையில் அதிகரிப்பு

0

நாட்டில் வளி மாசு மட்டத்தின் அளவு அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் கடந்த 27ஆம் திகதி முதல் இவ்வாறு அசாதாரணமான முறையில் வளி மாசு அதிகரித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்திய துணைக் கண்டத்தின் மேல் வானத்தின் வளி மாசு எமது நாட்டின் வளிமண்டலத்திற்குள் நுழைவதனாலேயே இவ்வாறு வளி மாசு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.