வாகன இலக்கத் தகடுகள் தொடர்பான புதிய திட்டங்கள் விரைவில்

0

தபால் வழியாக வாகன உரிமங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட இலக்கத் தகடுகளை விநியோகிக்க புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும் வாகங்களை ஒழுங்குபடுத்தல், பேருந்து போக்குவரத்துச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அத்துடன் எதிர்காலத்தில் வாகன சாரதிகள் தங்களது பழைய இலக்கத் தகடுகளை மோட்டார் வாகன போக்குவரத்துத் துறையிடம் ஒப்படைக்கத் தேவையில்லை.

மேலும் இரு மாகாணங்களுக்கிடையிலான வாகனங்கள் விற்பனையின்போது இலக்கத் தடுகளில் மாற்றம் செய்யத் தேவையான சட்டமும் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதியதொரு திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.