விமான நிலையங்களில் சிக்கியுள்ள 33 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை!

0

வெளிநாடுகளிலுள்ள விமான நிலையங்களில் சிக்கியுள்ள 33 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

குறித்த 33 பேரும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர், அவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.