இலங்கையில் மூன்றாவது கொவிட் அலை ஏற்படக் காரணம் என்ன?

0

கடந்த புத்தாண்டு காலப்பகுதியில் நுவரெலியாவில் வசந்த கால கொண்டாடங்களை நடத்த கூடாதென சுகாதார பணிப்பாளர் தெளிவுப்படுத்தியிருந்த போதிலும் அதனை நடத்தியமையே இந்த அளவு பாதிப்பிற்கு காரணம் என கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

எனினும் ஆலோசனைகளை மீறி வசந்த கால கொண்டாட்டங்கள் நடத்தியமையே வைரஸ் பரவ முக்கிய காரணாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வரையில் நுவரெலியாவில் மாத்திரம் 80 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வசந்த கால நிகழ்வு நடத்தியவர்களே இந்த நிலைமைக்கு பொறுப்புக்கூற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர் மக்கள் அதே போன்று செயற்பட்டால் நாட்டில் மிகவும் நெருக்கடியான நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக கொவிட் டெல்டா மாறுபாடு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையினுள் மக்கள் அவ்வாறு செயற்பட்டால் இலங்கையில் மிகப்பெரிய ஆபத்தான நிலைமை ஏற்படும் என கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் எச்சரித்துள்ளார்.