இலங்கையில் ஸிகா வைரஸ் பரவும் ஆபத்து

0

இலங்கையிலும் ஸிகா வைரஸ் பரவும் ஆபத்துக்கள் உள்ளதென சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கேரளாவில் பரவும் ஸிகா வைரஸ் தொற்றுக்குள்ளான எவராவது இலங்கைக்கு வந்தால் இந்த ஆபத்து ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் பிறக்கவுள்ள குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்துக்களை கொண்டுள்ளது.

நுளம்புகள் மூலம் பரவும் ஸிகா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 13 பேர் இந்தியாவின் கேரளாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கேரளாவில் இருந்து ஒருவர் இலங்கை வந்தால் அவர் ஸிகா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளாரா என்பது தொடர்பில் உடனடியதாக பரிசோதனை நடத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.