”உரம் இன்றி உழவு இல்லை”விவசாயிகளின் தற்கால பிரச்சினைக்கு தீர்வுகோரி மட்டக்களப்பில் போராட்டம்!

0

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பசளையின்றி சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சரும்,மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் மௌனமாகயிருப்பதாகவும் தங்களுக்கான பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு,பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

உரம் இன்றி உழவு இல்லை”விவசாயிகளின் தற்கால பிரச்சினைக்கு தீர்வுகோரி கண்டனப்போராட்டம் மட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இந்த கண்டன போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா,பிரதேசசபையின் தவிசாளர் நா.புஸ்பலிங்கம் உட்பட பிரதேசசபை உறுப்பினர்கள்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

முடக்காதே முடக்காதே எமது விவசாயத்தினை முடக்காதே,அழிக்காதே அழிக்காதே எமது பொருளாதாரத்தினை அழிக்காதே,திடீர் சேதனம் விவசாயத்தினை முடக்கும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

கொக்கட்டிச்சோலை சந்தியிலிருந்து பேரணியாக வந்து கொக்கட்டிச்சோலை கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.