உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஸ்வாதி மோகன் யார் ?- சில குறிப்புகள்

0

நாசாவின் பெர்சவரன்ஸ் என்ற விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது. நாசா இதனை அறிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ‘பெர்சவரன்ஸ்‘ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும், இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்‘ விண்கலம் வெள்ளிக்கிழமை தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது என நாசா தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளில் மிகமுக்கியமான பங்களிப்பை வழங்கியவர் ஸ்வாதிமோகன்
மார்ஸ் 2020 ரோவரின் அணுகுமுறை கட்டுப்பாடு மற்றும் தரையிறங்கும் முறை development of attitude control and the landing system of the Mars 2020 rover – ஆகிய நடவடிக்கைகளிற்கு பொறுப்பாகவுள்ளவர் ஸ்வாதி மோகன்.

ஸ்வாதிமோகன் இந்தியாவிலிருந்து தனது ஒரு வயதில் அமெரிக்கா சென்றவர். வேர்ஜீனியா- மற்றும் வோசிங்டனில் வாழ்ந்த இவர் மெக்கானிக்கல் ஏரோபேஸ் துறையில் பட்டப்படிப்பை முடித்து பின்னர் ஏரோநட்டிக்ஸ் – விண்வெளி துறைகளில் மேல்படிப்பை பூர்த்திசெய்தவர்

குழந்தைகள் தொடர்பான மருத்துவராகவேண்டும் என்பதே எனது இளமை கால கனவு என தெரிவிக்கும் ஸ்வாதி மோகன் நான் எப்போதும் விண்வெளி குறித்து ஆர்வமாகயிருந்தேன் ஆனால் அந்த ஆர்வத்தை எப்படி எனது தொழிலாக மாற்றுவது என்பது குறித்து தெரியாத நிலையிலிருந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனது 15 வயதில் எனது முதலாவது பௌதீகவியல் பாடத்தை கற்கஆரம்பித்தவேளை எனக்கு மிகச்சிறந்த ஆசிரியர் கிடைத்தார் அது எனது அதிஸ்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் காரணமாக அனைத்தும் விளங்கக்கூடியதாக இலகுவானதாக காணப்பட்டது அதன் பின்னரே நான் விண்வெளியை ஆராய்வதற்காக பொறியல்துறை குறித்து சிந்தித்தேன் என அவர் தெரிவித்திருந்தார்.

விஞ்ஞான புனைகதைகள் எனக்கு விண்வெளி குறித்த ஆர்வத்தினை அதிகரித்தன என தெரிவித்திருந்த அவர் ஒன்பது வயதில் ஸ்டார்டிரெக்கை பார்த்தது நினைவில் உள்ளது. அவர்கள் ஆராயும் புதிய பிரபஞ்சத்தின் புதிய பகுதிகளின் அழகான சித்தரிப்புகளை பார்த்தது இன்னமும் நினைவில் நிற்கின்றது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

எனக்கு இது வேண்டும் நான் பிரபஞ்சத்தில் புதிய அழகான இடங்களை கண்டுபிடிக்கவேண்டும் என நினைத்தது எனக்கு நினைவில் உள்ளது என அவர் தெரிவித்திருந்தார்.

பிரபஞ்சத்தை பற்றிய மனித புரிதல்களின் எல்லைகளை மேலும் விஸ்தரிப்பதற்கான பலதாசப்தகால மோகனின் ஆர்வம் அவரை மார்ஸ் 2020 இன் வழிகாட்டுதல்கள் குறித்த செயற்பாடுகளின் தலைவராக மாறியுள்ளது.