ஒன்றுகூடல்கள், உட்புற நிகழ்வுகளை நிறுத்துங்கள்!

0

இலங்கையின் 4 பகுதிகளில் புதியவகை திரிபுபட்ட கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதிகளவு மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை தவிர்க்குமாறு இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்க தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

தற்போதுள்ள சட்டங்களின்படி, சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும்போது இறுதி சடங்கு மற்றும் திருமண விழாக்கள் மட்டுமே நடத்த முடியும்.

தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டைப் பாதுகாக்க, எமக்கு பொது மக்களின் முழு ஆதரவு தேவை.

கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளிலிருந்து பிரிட்டனில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட பி 1.1.7 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளது .

ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகம், ஜனவரி மாதத்தில் பெறப்பட்ட மாதிரிகளில்

அதிக பரவுதலைக் கொண்ட பிரிட்டன் கொரோனா வைரஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் நிபுணர்களின் கூற்றுப்படி, இங்கிலாந்தின் திரிபுபட்ட கொரோனா வைரஸின் மற்றவற்றை விட 50 சதவீதம் அதிக பரவுதலைக் கொண்டுள்ளது என்றார்.

எனவே அதிகளவு மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.