கண்காணிப்பாளர்களின் கண்ணில் மண்ணைத்தூவிய இளைஞர்கள்: மட்டக்களப்பில் திலீபனிற்கு அஞ்சலி!

0

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை நடத்தவிடக்கூடாதென கண்கொத்திப் பாம்பாக இலங்கை பொலிசார், முப்படையினர், புலனாய்வுத்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களின் கண்களில் மண்ணைத் தூவி மட்டக்களப்பில் இளைஞர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடி விஸ்ணு ஆலயத்தில் தியாக தீபம் திலீபனின் உருவப்படம் வைக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.