கொரோனா தொற்று – 4 பேர் மரணம்

0

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 12 பிரதேசத்தை ​சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும், பொரளை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.