கொழும்பில் கடற்கரைக்கு அருகில் உள்ள பிரதேசங்களில் மிதக்கும் பொருட்களை தொடுவதனை தவிர்க்குமாறு கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் மக்களிடம் கேட்டுள்ளது.
குறித்த பொருட்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலில் நச்சு இரசாயனங்களாக இருக்க கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அவை உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும் என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தர்ஷனி லஹதபுர தெரிவித்தள்ளார்.
குறித்த கப்பலில் வேகமாக தீப்பரவ ஆரம்பித்துள்ள நிலையில், கப்பலில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தீயை கட்டுப்படுத்துவதற்காக 212 பெல் ரக ஹெலிகப்டரும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.