ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கின்றார் மைக் பொம்பியோ!

0

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இன்றைய தினம்(புதன்கிழமை) இந்த சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.

இந்த சந்திப்புகளின் பின்னர், இன்று நண்பகல் 12.30க்கு குறித்த தூதுக்குழுவினர் மாலைதீவு நோக்கி பயணிக்கவுள்ளனர்.

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர் நேற்று இரவு நாட்டை வந்தடைந்தனர்.

அமெரிக்காவுக்கு சொந்தமான Boeing 757 ரக விசேட விமானத்தின் மூலம் நேற்று இரவு 7.35 க்கு குறித்த தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோவுடன் 36 பேர் அடங்கிய உயர்மட்ட தூதுக்குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் குறித்த உயர்மட்ட தூதுக்குழுவினரை வரவேற்க விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.