ஜெனீவா அறிக்கைக்கு எதிராக நாங்கள் ஒன்றிணைய வேண்டும் – அமைச்சர் பீரிஸ்

0

ஜெனீவா தீர்மானங்களுக்கு எதிராக படைவீரர்களை காப்பாற்ற மற்றும் நாட்டின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்காக ஒரு நாடாக இலங்கையர்கள் ஒன்றுபட வேண்டும் என அரசாங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து கருத்து தெரிவிக்கும்போதே கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேரத்திற்குள், இலங்கையைப் பற்றி அறிய 13 புதிய நியமனங்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஜி. எல். பீரிஸ் குறிப்பிட்டார்.

இந்த அறிக்கைகளில் உள்ள வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சிகள் கூட நாட்டிற்காக நிற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் 10 ஆண்டுகளாக நடைமுறையில் இல்லாத சட்டங்களை உருவாக்க, திருத்த அல்லது மாற்ற வேண்டிய நேரம் இது என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.