தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 1390 பேர் கைது!

0

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 390 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

சரியான முறையில் முகக்கவசம் அணியாமை மற்றும் மாகாண எல்லைகளை கடக்க முயன்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.