திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் தேர் உற்சவம்

0

மட்டக்களப்பின் பிரசித்திபெற்ற ஆலயங்களுள் ஒன்றான ஈழத்து திருச்செந்தூர் என அழைக்கப்படும் கல்லடி, திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தேர் உற்சவம் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த எட்டுத்தினங்களாக ஆலயத்தில் உற்சவ பூசைகள் இடம்பெற்றுவந்ததுடன் நேற்று தேர் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

இந்தியாவின் திருச்செந்தூர் ஆலயத்தினை ஒத்த காட்சிகளுடன் உள்ள இந்த ஆலயத்தின் தேர் உற்சவத்தில் பெருமளவு பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையில் தமிழில் பூசைசெய்யப்படும் ஒரேயொரு ஆலயமாக கருதப்படும் இந்த ஆலயத்தில் நேற்று காலை தம்ப பூசை இடம்பெற்று முருகப்பெருமானுக்கு விசேட பூசைகள் இடம்பெற்றன.

அனைத்தொடர்ந்து வீதியுலா வந்த முருகப்பெருமான் பக்தர்கள் புடை சூழ ஆரோகரா ஓசையுடன் தேரில் ஏறி வலம் வந்தார்.

ஆண்கள் ஒரு பக்கமாகவும் பெண்கள் ஒரு பக்கமாகவும் தேரின் வடக்கையிரை அடியார்கள் இழுக்க நாதஸ்வர மேள தாளங்களுடன் முருகப்பெருமான் தேரேறி வந்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.