திருப்பெருந்துறை 1 ஆம் குறுக்கு வீதியினை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பம்

0

மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்கே கொண்டு செல்வோம் எனும் கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட திருப்பெருந்துறை முதலாம் குறுக்கு வீதியினை புனரமைக்கும் பணிகள் நேற்று(புதன்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாநகர சபைக்கு மக்களினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தினை முழுமையாக மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகளின் ஊடாக 19ஆம் வட்டார உறுப்பினர் மா.சண்முகலிங்கம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க இந்த வீதியானது கொங்றிட் வீதியாக செப்பனிடப்படவுள்ளது.

மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீட்டு நிதி ஒதுக்கீட்டின் ஊடாக 100 மீற்றர் நீளத்தில் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த வீதியின் அபிவிருத்திப் பணிகளை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபையின் உறுப்பினர்களான மா.சண்முகலிங்கம், துரைசிங்கம் மதன் மற்றும் திருப்பெருந்துறை கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.