நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே இராணுவத்தினருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் – கெஹெலிய

0

நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே இராணுவத்தினருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன என வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘போர் முடிவடைந்ததிலிருந்தே இப்படியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை இதுவாகும். பின்னணியில் அரசசார்பற்ற அமைப்புகளும் உள்ளன.

அவர்கள் எப்படிதான் செயற்பட்டாலும்,எவ்வாறான குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும் அவற்றை ஏற்பதற்கு அரசாங்கம் தயாரில்லை.

ஜெனிவாவில் 30/1 தீர்மானத்துக்கு கடந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது.

இது தவறான நடவடிக்கையாகும். மேற்படி தீர்மானத்தை எமது அரசாங்கம் விலக்கிக்கொண்டுள்ளது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.