பயணக்கட்டுப்பாடு என்ற முடக்க நிலை அடுத்த வாரமும் நீடிக்கப்படுமா?

0

நாடுமுழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயண கட்டுப்பாட்டை மேலும் நீடிப்பதா? என்பது தொடர்பில் முடிவுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

கோவிட் வைரஸ் தொற்று நோயாளர்கள் மற்றும் கோவிட் தொற்று மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இவற்றைக் கட்டுப்படுத்தும்  நோக்கில் கண்காணிப்பு பணிகளில் நாடு முழுவதும் 22000 பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். 

பல இடங்களில் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நடமாடும் ரோந்து படையணியினரும் கண்காணிப்பில் ஈடுபடுவர் எனவும் அஜித் ரோஹன தெரிவித்தார்.  

இலங்கை முழுவதும் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் பயண கட்டுப்பாடு என்ற பெயரில் முடக்க நிலை அமுலுக்கு வந்துள்ளது. 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை இந்தப் பயணத் தடை அமுலில் இருக்கும். 

25 ஆம் திகதி காலை இந்தப் பயணத் தடை நீக்கப்பட்டு மீண்டும் அன்றிரவு 11 மணிக்கு பயணத்தடை அமுலாகும்.