மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது கேள்வி குறியே? முக்கிய தகவல் வெளியானது!

0

பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போது அது கேள்விக்குறியாக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை சுகாதார துறையினரே எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுகாதார பிரிவின் ஆலோசனைகளுக்கு அமையவே, பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களும் கேட்டறியப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு மாத்திரமன்றி, அவர்களின் எதிர்காலம் தொடர்பிலும் கருத்திற் கொண்டே தீர்மானம் எட்டப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவிருந்த பின்னணியில், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலையினால், மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் 23ஆம் திகதி வரை பிற்போடப்பட்டது.

எனினும், நாட்டின் நிலைமை தொடர்ந்தும் அபாயத்தில் உள்ளமையினால், சுகாதார பிரிவின் ஆலோசனைகளுக்கு அமையவே, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் விடுமுறைகள் குறைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.