மேலும் இரண்டு பகுதிகள் முடக்கம் – இராணுவ தளபதி

0

பேருவளை பன்வில மற்றும் சீனன் கொட்டுவ பகுதிகள் கொரோனா வைரஸ் பரவும் அதிக அபாயம் மிக்க பகுதிகளாக அறிவிக்கப்பட்டு முடக்கபட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று (திங்கட்கிழமை) இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட அனைவரும் மட்டக்களப்பு, புனாணையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் அனைவரும் களுத்துறை மாவட்டம் – பேருவளை பகுதியில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக அங்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்திருந்தது.

பேருவளையில் இருந்து புனாணை தனிமைப்படுத்தல் முகாமுக்கு 219 பேர் அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொடர்பில் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவும் அபாயம் மிக்க பகுதிகளாக பேருவளை பன்னில மற்றும் சீனகொரோட்டுவ பகுதிகள் அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.