20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் ஊடாக மேலும் பல திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.
இதன்போதே அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
செயற்குழு கூட்டத்தின்போது எடுத்த திருத்தங்கள் அடங்கிய எழுத்து மூலமான பத்திரம் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் சிசிர த ஆப்ரோ ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் தற்போது குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.