450 முதல் 1000 சீ.சீ மோட்டார் சைக்கிள்கள் தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

0

450 முதல் 1000 சீ.சீ இயந்திர வலுக்கொண்ட மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும் இது தொடர்பாக அமைச்சரவை முடிவை எடுக்கும் முன்னர் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வாகன கண்காணிப்பு, பேருந்து போக்குவரத்து சேவைகள் ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இந்த மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய எட்டு லட்சம் ரூபாய் மேலதிக கட்டணம் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.