மேல்மாகாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்ட பிரஜைகளை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கை இன்று(சனிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமை காரணமாக கொழும்பில் தங்கியிருந்த வெளிமாவட்ட பிரஜைகள் தங்களின் வசிப்பிடங்களுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் இதன் முதற்கட்டமாக கர்ப்பிணித்தாய்மார், நீண்டால நோயாளர்கள் உள்ளிட்டவர்கள் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய தங்களது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்காக 52 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்த நிலையில் 370 இன்று களனியில் வைத்து வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சியுள்ளவர்களை விரைவில் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.