சிவசக்தி விளையாட்டுக்கழகத்திற்க்கு புதிய சீருடை அறிமுகம்.

0

துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக்கழகத்தின் புதியசீருடையை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் அறிமுகம் செய்து வைதார்.

திறமையான இளம் வீரர்களை கொண்ட துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக்கழகத்தின் வீரர்களை ஊக்கப்படுத்துவதற்க்காக புதிய சீருடையினை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு அன்பளிப்பு செய்தது.

சீருடை அறிமுக நிகழ்வில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் செயலாளர் கணேசமூர்த்தி சசீந்திரன், துறைநீலாவணை மகாவித்தியாலய பாடசாலை விளையாட்டு பயிற்று விப்பாளர் பயாஸ், கழகத்தின் முன்னால் தலைவர் ஆசிரியர் ஆனந்தராசா ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.