68 பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊடங்கு!

0

நாடாளாவிய ரீதியில் இதுவரை 68 பொலிஸ் பிரிவுகளில் ஊடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, பயாகல மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்து அமுலில் உள்ளது.

அத்துடன், கொழும்பு நகரின் 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கொத்தட்டுவை மற்றும் முல்லேரியா ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருதானை மற்றும் தெமட்டகொட ஆகிய பகுதிகளுக்கும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கொட்டாஞ்சேனை, முகாத்துவாரம், மட்டக்குளி, கிரேண்ட்பாஸ், வெல்லம்பிட்டி மற்றும் புளூமெண்டல் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஏற்கனவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணத்தின் குளியாப்பிட்டிய, நாராம்மல, தும்மலசூரிய, பன்னல மற்றும் கிரியுல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கம்பஹா மாவட்டத்தில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, மறு அறிவித்தல் வரை குறித்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.