70 வீதமானவர்களிற்கு கொரோனா அறிகுறி காண்பிக்கவில்லை

0

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், முதல் பரிசோதனையில் சகலருக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறிப்படுவதில்லை.

கொரோனா தொற்றாளர்களில் 70 வீதமானவர்களிற்கு வைரஸ் இருப்பதை கண்டறிய முடியாத நிலைமை காணப்படுகிறது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் கொரோனா பரவல் நிலைமைகள் சமூக பரவலாகி விட்டது.

கொத்தணிகளாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதை தாண்டி சமூகத்தில் சகல இடங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலைமை காணப்படுகிறது.

எனவே நாட்டில் பிரதான ஐந்துமாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், கேகாலை மாவட்டங்களை முடக்கி தொற்றாளர்களை அடையாளம் காண நடவடிக்கையெடுக்க வேண்டும்.

தொற்றாளர்களை அடையாளம் காண்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. ஏனெனில், வைரஸ் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்படம் நபர்களின் 30 வீதமானவர்களிற்கே கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

70 வீதமானவர்களிற்கு தொற்று உள்ளதா என்பதை முதல் பரிசோதனையில் காண முடியாதுள்ளது. எனவே தொற்றுநோய் அச்சுறுத்தல் குறைந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றார்.