மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரிக்கு கொரோனா

0

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இன்று(வெள்ளிக்கிழமை) கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாருக்கு பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.