சம்பந்தனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் மஹிந்த !!

0

திருகோணமலை மாவட்டத்திற்கு கொரோனா பரிசோதனை செய்வதற்குரிய பி.சி.ஆர் இயந்திரத்தை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் இயந்திரம் இல்லாமையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இங்கு அதிக கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும் இருப்பினும் பரிசோதனை செய்வதற்கு பி.சி.ஆர் இயந்திரம் வைத்தியசாலையில் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் கொரோனா தொற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு மற்றும் கொழும்பு போன்ற தூர இடங்களுக்கு மாதிரிகள் அனுப்பி வைப்பதனால் காலதாமதமும் சிரமங்களையும் எதிர்நோக்கி வருவதாக இரா.சம்பந்தன், பிரதமர் மஹிந்தவிடம் எடுத்துரைத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பி.சி.ஆர் இயந்திரத்தை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை தாம் மேற்கொள்வதாக பிரதமர் உறுதியளித்துள்ளதாக இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.