நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள உணவகத்தின் பணியாளர் ஒருவர் திடீர் சுகவீனமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு நேற்று கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் உடனடியாகவே அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக நாடாளுமன்ற ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
கேகாலையை சேர்ந்த அந்த பணியாளர் கொழும்பில் வாடகை வீடு ஒன்றில் தங்கியுள்ளார். எனினும் கொரோனா பரவல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட பணிநேர அட்டவணைக்கு ஏற்ப அவர் கேகாலையில் இருந்து பணிக்கு வந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டபோதும் என்டிஜன் சோதனையின்போது தொற்று இல்லை என்று தெரியவந்தது.
எனினும் பீசீஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனவே பீசீஆர் முடிவு வரும் வரை காத்திருப்பதாக நாடாளுமன்ற ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.