தனிமைப்படுத்தப்பட்டாரா நாமல்?

0

2021ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் விளையாட்டுத்துறை அமைச்சிக்கான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் (28) நடைபெற்ற போது, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சபைக்கு பிரசன்னமாகாமை, தற்போது அதிகம் பேசப்படுகின்றது.

விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நாமல் ராஜபக்ஷ, தனது அமைச்சிக்கான முதலாவது விவாதத்திலேயே கலந்துக்கொள்ளவில்லை.

சபை நடவடிக்கைகளுக்கு நாமல் ராஜபக்ஷ கலந்துக்கொள்ள மாட்டார் எனவும், அவர் சபைக்கு பிற்பகல் வேளையில் பிரசன்னமாவார் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

எனினும், நாமல் ராஜபக்ஷ பிற்பகல் வேளையிலும் சபைக்கு வருகைத் தராமையினால், எதிர்கட்சி உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ குறித்து கேள்வி எழுப்பினார்.

எவ்வாறாயினும், நாமல் ராஜபக்ஷ சபை நடவடிக்கைகளில் இறுதி வரை கலந்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நாமல் ராஜபக்ஷவின் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளருக்கு, கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமையினால், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, அலரிமாளிகையில் கடமையாற்றும் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையினால் இளைய புதல்வன் ரோஹித்த ராஜபக்ஷ மற்றும் அவரின் குடும்பத்தார் அலரிமாளிகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரோஹித்த ராஜபக்ஷ மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், அவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.