இலங்கையில் நிமோனியாவினால் பீடிக்கப்பட்ட 1000 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை

0

இலங்கையில் கோவிட் வைரஸினால் நிமோனியா காய்ச்சலுக்கு உள்ளான ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது வரையில் மிகவும் அவதானமிக்க மற்றும் தீர்மானமிக்க நிலையில் உள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க கூடிய அனைத்து நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் எதிர்வரும் மூன்று அல்லது நான்கு வாரத்தில் மிகவும் மோசமான நிலைமை ஏற்பட கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் நிமோனியா ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்ற போதிலும் வேறு நோய்கள் இருக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் உயிரிழக்கும் ஆபத்துக்கள் அதிகம் என அவர் கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும். மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.