ஜனாதிபதி அமுல்படுத்தியுள்ள அவசர சட்டம்!

0

அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கான அவசர சட்ட விதிமுறைகளை இன்று (30) நள்ளிரவு முதல் அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இதனை அமுல்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.  

நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கிவைத்தல், அதிக விலைக்கு விற்றல், உள்ளிட்ட செயற்பாடுகளின் ஊடாக நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாகும் சந்தை முறைக்கேடுகளை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.https://googleads.g.doubleclick.net/pagead/ads?us_privacy=1—&client=ca-pub-3603232726550318&output=html&h=250&adk=2900857649&adf=3008535365&pi=t.aa~a.3987527503~i.5~rp.4&w=335&fwrn=7&fwrnh=100&lmt=1630345487&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=7505841888&psa=1&ad_type=text_image&format=335×250&url=https%3A%2F%2Ftamilwin.com%2Farticle%2Femergency-law-enacted-by-the-president-1630341704&flash=0&fwr=0&pra=3&rh=280&rw=335&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1630345400781&bpp=7&bdt=2565&idt=7&shv=r20210824&mjsv=m202108240101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D3a3f61b8727e4c8d-220a43df38cb000b%3AT%3D1630225369%3AS%3DALNI_Ma4a_rcLo8rBp4nrffVJkxRdqJSOQ&prev_fmts=0x0%2C336x0%2C336x0&nras=2&correlator=1222455902019&frm=20&pv=1&ga_vid=1706933844.1630225367&ga_sid=1630345400&ga_hid=1631249009&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=667&u_w=375&u_ah=667&u_aw=375&u_cd=32&u_nplug=0&u_nmime=0&adx=20&ady=1366&biw=375&bih=553&scr_x=0&scr_y=0&eid=31062297&oid=3&pvsid=2120627613483737&pem=134&ref=https%3A%2F%2Ftamilwin.com%2Fsrilanka&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C375%2C0%2C375%2C667%2C375%2C553&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&ifi=12&uci=a!c&btvi=1&fsb=1&xpc=5hnriKN6Mk&p=https%3A//tamilwin.com&dtd=86713

இதன்படி, அரசாங்கத்தின் உறுதிப்பாட்டு விலை அல்லது சுங்கம் இறக்குமதி செய்த விலை என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு, மேற்படி உணவு பொருட்களை கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குவதற்கு அங்கீகாரம்பெற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும், அரச வங்கிகளின் ஊடாக மொத்தக் கொள்வனவுக்காக வழங்கப்பட்டுள்ள கடனை, கடன் பெற்றவரிடம் அறவீடு செய்யக்கூடியவாறும் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.