மறுபரிசீலனை செய்யப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் ஏற்பாடுகள்

0

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்பட உள்ளன.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கைக்கு விரிவான பதிலில் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளது.

இலங்கை எழுப்பிய ஆட்சேபனைகளைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தமது அறிக்கையுடன் இலங்கை அளித்த பதிலையும் சேர்த்து இப்போது வெளியிட்டுள்ளது.

தமது முழு பதிலையும் இணையத்தில் வெளியிடக் கோரி இலங்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதியிருந்தது.

அதன்படி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, வெளியிட்டுள்ள இலங்கையின் பதிலில், பயங்கரவாத எதிர்ப்பு யோசனை, நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறை மேற்பார்வைக் குழு, மதத் தலைவர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களைக் கருத்தில் கொண்டு திரும்பப் பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், பொதுச் சமூக குழுக்கள் மற்றும் பொது அமைப்புகள் இந்த நேரத்தில் அத்தகைய சட்டம் தேவையற்றது என்று தெரிவித்திருந்தன.

எனினும் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தின் முன்னேற்றம் கருதி பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய நோக்கம் கொண்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் உள்ள வழக்குகளை சட்டமா அதிபர் மறு ஆய்வு செய்து வழக்குகள் அகற்றப்படும் என்றும் அரசாங்கம் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளது.