விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவுக்கு பாராளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள்

0

 அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கிணங்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு 73 ஆம் இலக்க ஆசனமும் பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவுக்கு 78 ஆம் இலக்க ஆசனமும் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

புதிய தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி. திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பின்வரிசை இருக்கைக்கு பதிலாக ஆளும் கட்சியின் இரண்டாவது ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திலும் அமுனுகம கட்சியின் 30 ஆவது ஆசனம் வரையில் முன்னேறியுள்ளார்.

மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை பெற்றுள்ள அருந்திக்க பெர்னாண்டோவுக்கு ஆளும் கட்சியின் 36 ஆவது ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.